x

MINISTRIES

  • புனித வின்சென்ட் தே பவுல் சபை

    நமது ஆலயத்தில் புனித வின்சென்ட் தே பவுல் சபையானது 19-10-2003 அன்று நமது முன்னாள் பங்குத் தந்தை அருட்திரு T.ஆபிரகாம் கொட்டுப்பரம்பில் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட்து. சபையின் தலைவராக சகோதரர் MMA நவமணி அவர்கள் நியமிக்கப்பட;டார். இக்கிளைச் சபையானது உலக மகா சபையுடன் 15 டிசம்பர் 2016 முதல் இணைக்கப்பட;டது இப்போது இச்சபையில் 22 செயல் உறுப்பினர்கள் உள்ளனர். இரண்டு துணை உறுப்பினர்கள் உள்ளனர். இச்சபையில் 18 ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உள்ளனர். இச்சபையின் தற்போதைய தலைவராக சகோதரர் MS லாரன்ஸ், துணை தலைவராக கிறிஸ்துதாஸ், செயலராக சகோதரர் பெவிஸ் மற்றும் பொருளராக சகோதரர் டேனியல் அவர்கள் உள்ளனர்.


    கடந்த 19 ஆண்டுகளாக நமது ஆலய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஏழைகள், தேவையில் உள்ளவர்களுக்கு ஜாதி மத பேதமின்றி மருத்துவம், கல்வி போன்ற அனைத்து உதவிகளையும் இச்சபையின் மூலம் செய்து வருகின்றோம். நமது சபையின் தற்போது 9 குடும்பங்கள் தத்து எடுக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். இவற்றை தவிர வருடத்திற்கு ஒரு முறை குளிர்கால போர்வை திட் டத்தினை செய்து வருகிறோம். எல்லா வருடமும் ஜனவரி மாதம் ஒரு நாள் இரவு சாலை ஓரம் படுத்து உறங்கும் ஏழை எளியவர்களுக்கு போர்வை உடுத்தி மற்றும் அவர்கள் உண்ண உணவும் கொடுத்து வருகிறோம். மற்றும் வருடத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம் நம் ஆலயத்தில் நடத்தி வருகிறோம். மேலும் கல்வி உதவி தொகையாக வருடத்திற்கு இரண்டு லட்சம் கல்வி உதவி செய்து வருகிறோம். இதில் நமது பங்கு மற்றும் நமது பகுதியைச் சார்ந்த மாணவ மாணவிகளுக்கும் உதவி செய்து வருகிறோம்.


    Society of St. Vincent de Paul

    St. Vincent de Paul Society in our church was started on 19-10-2003 by our former parish priest Rev Fr T.Abraham Kottuparambi. Mr. MMA Navamani was appointed as the Chairman of the Council.. This Council was linked to the World General Assembly on 15th December 2016; it has now 22 active members. There are two sub-members. There are 18 men and four women in this Society . The current president of the congregation is Mr. MS Lawrence, Vice President Mr. Christu Das, Secretary Mr.Bevis and Treasurer Mr. Daniel.


    For the past 19 years, the Society has been providing all kinds of assistance to the poor and needy people in the areas within the boundaries of our parish, regardless of caste, religion, etc. through this church. Currently 9 families of our congregation have been adopted and we are providing all necessary help to them. Apart from these, we are doing winter blanket project once a year. Every year in January one night we clothe the poor and needy who sleep on the roadside and give them food to eat. Once a year we conduct a medical camp in our Community hall. The Society provides educational assistance of Rs.2 lakhs per year to the needy and help the students of our parish as well as the neighborhood.

Go To Top