x

Our Parish

The Priests who devoted their time and energy to the growth of our parish and the enrichment of the spiritual life of the parishioners. நமது பங்கின் வளர்ச்சிக்கும், பங்கு மக்களின் ஆன்மிக வாழ்வு வளம்பெறவும் தங்கள் நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணித்த அருட்பணியாளர்கள்


கோல்டன் ஜார்ஜ் நகர் பங்கு ஆலயத்தின் வரலாறு

  

கிறிஸ்துவுக்குள்‌ பிரியமானவர்களே!

1986-ஆம்‌ ஆண்டு புனித பவுல்‌ சபை, புனித லூக்காஸ்‌ ஆலயப்‌ பங்குத்தந்தை ஸ்டீபன்‌ புல்லன்‌ அடிகள்‌ நமது ஆலய வளாகத்தில்‌ 8 கிரவுண்ட்‌ இடத்தையும்‌, அதற்கு அடுத்த பங்குத்‌ தந்தை டோம்னிக்‌ அடிகள்‌ 6 கிரவுண்ட்‌ இடத்தையும்‌ வாங்கினார்கள்‌.

ஆக இப்பகுதி 280 அடி நீளம்‌ 120 அடி அகலம்‌ அமைந்துள்ளது. இப்பகுதி மக்களின்‌ வசதிக்காக 1989-ம்‌ ஆண்டு ஆகஸ்ட்‌ திங்கள்‌ 15-ம்‌ நாள்‌ குறிப்பாக மாதா விண்ணேற்பு நாள்‌ இந்திய திருநாட்டின்‌ சுதந்திர நாள்‌ அன்று அருட்தந்தை டோமினிக்‌ அடிகள்‌, அருட்தந்தை சுவாமி மற்றும்‌ அருட்தந்தை அற்புதராஜ்‌ இவர்களின்‌ கூட்டுத்‌ திருப்பலியுடன்‌ புனித லூக்காஸ்‌ ஆலயத்தின்‌ சிற்றாலயமாக செயல்பட துவங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஞாயிறு தோறும்‌ காலை 8.30 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. ! அதன்பின்‌ நமது பிள்ளைகளுக்கு மறைக்கல்வி வகுப்புகள்‌ நடைபெற்றன. ஆண்டு தோறும்‌ | ஆகஸ்டு 15-ம்‌ நாள்‌ ஆண்டு விழா சிறப்பாகக்‌ கொண்டாடப்பட்டு வந்தது. விழாவின்‌ போது | சமபந்தி அனைவருக்கும்‌ வழங்கப்பட்டது.சிற்றாலைய வளர்ச்சிக்காக ஜெபக்‌ குழுவினர்‌ வாரத்தில்‌ ஒரு நாள்‌ ஒரு இல்லம்‌ சென்று நற்செய்தி பகிர்வு மற்றும்‌ ஜெப வழிபாடு நடத்தி வந்தனர்‌. 1994-ம்‌ ஆண்டு ஜூன் திங்கள்‌ 13-ம்‌ நாள்‌ நமது சிற்றாலயம்‌ சென்னை மயிலை உயர்மறை மாவட்டத்தின்‌ பங்கு ஆலயமாக உயர்த்தப்பட்டு, அருட்தந்தை பூ.செபாஸ்டியன் ‌ அடிகள் நமது பங்கின்‌ முதல் பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்றார்கள்‌ மேற்கு முகப்பேரில்‌ அமைந்துள்ள புனித அந்தோணியார்‌ ஆலயம் நமது பங்கின்‌ சிற்றாலயமாக செயல்படத்‌ தொடங்கியது. நமது உயர்‌ மறைமாவட்டத்தில்‌ தமிழகத்திலே இதுவரை இல்லாத மூவொரு இறைவனின் பேரான தூய திரித்துவ தேவனை பபாதுகாவலராகக்‌ கொண்ட ஆலயம்‌ என்ற பெயரைத் தந்த பெருமை அருட்தந்தை பூ. செபாஸ்டியன்‌ அடிகளையே சாரும்‌. பங்குத் தந்தை தங்குவதற்கு 1994-ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதம்‌ 9-ம்‌ நாள்‌ அன்றைய பேராயர் அருள்தாஸ் ஜேம்ஸ்‌ ஆண்டகை அவர்களால்‌ திறந்து வைக்கப்பட்டது.

அன்றைய தினமே இப்போது அமைந்துள்ள ஆலயம் அடிக்கல்‌ நாட்டப்பட்டது. அப்போது ஞாயிறு மற்றும் விழாக்கால திருப்பலி உதவிக்காக பழஞ்சூரில் அமைந்துள்ள DMI அருட் சகோதரிகள் ஆலயப்பணி செய்து வந்தார்கள்.‌

அருட்தந்தை பூ. செபாஸ்டியன்‌ அடிகளின்‌ கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் ‌, இத்தாலி நாட்டு தூரின்‌ நகரைச்‌ சார்ந்த நல்‌ உள்ளங்கொண்ட ஒரு பேரு உபகாரியின் உதவியாலும்‌, இறைவனின்‌ ‌ கிருபையாலும் ஆலயம்‌ மற்றும்‌ சமூகக்‌ கூடம் கட்டி முடிக்கப்பட்டது. 1999-ம்‌ ஆண்டு ஆகஸ்ட்‌ திங்கள்‌ 15-ம்‌ நாள் அன்றைய பேராயர் அருள்தாஸ்‌ ஜேம்ஸ்‌ ஆண்டகை அவர்களால்‌ அபிஷேகம்‌ செய்யப்பட்டது.

புனித செபஸ்தியான் சமூகக் கூடம்‌ 1999 அக்டோபர் திங்கள்‌ 24-ம்‌ நாள்‌ நமது உயர்மறை மாவட்ட துணை ஆயர்‌ லாரன்ஸ்‌ பயஸ்‌ அவர்களால் மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது. ஞாயிறு திருப்பலிகள்‌ காலை 8.30 மணிக்கு தமிழிலும்‌, மாலை 5.௦௦ மணிக்கு ஆங்கிலத்திலும்‌ வார ‌ நாட்களில்‌ தினந்தோறும்‌ காலை 6.30 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. ஞாயிறு கிழமைகளில் 8.30 மணி திருப்பலிக்குப்‌ பின்‌ நமது சிறுவர்‌

சிறுமிகளுக்கு மறைக்கல்வி வகுப்பு நடைபெற்றது. பங்கு 16 அன்பியங்களாக செயல்பட்டு வந்தன. ‌ தற்போது 21 அன்பியங்களாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நமது ஆலய வளாகத்தின்‌ எதிரில் அமைந்துள்ள திரு இருதய சபை அருள் சகோதரிகள் இல்லம் அருள் தந்தை பூ. செபாஸ்டியன்‌அடிகளின் விடாமுயற்சியால் 2000 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 22 ஆம் நாளிலிருந்து நமது பங்கிலும் சிற்றாலயத்திலும் ஆலய பணிகள் செய்து வந்தார்கள்.

நமது பங்கில் பாடற் குழு, பீடச் சிறுவர்கள் குழு, இளைஞர்கள் குழு மறைக்கல்வி ஆசிரியர்கள் குழு, மரியாவின் சேனை, ஜெப குழு போன்ற பத்து சபைகள் செயல்பட்டு வந்தன. மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தூய மூவொரு இறைவனுக்கு கொடியேற்றம் முடிந்தவுடன் பங்கு மக்கள் அனைவரும் நல்லுறவை வளர்க்க வேண்டும் என்னும் இந்த எண்ணத்தில் தேனீர் வழங்கப்பட்டது. அருட்தந்தை பூ. செபாஸ்டியன் அவர்கள் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு மே திங்கள் இறுதிவரை ஆலய வளர்ச்சிக்காக, மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக சீரும் சிறப்புமாக இறை பணி செய்து வந்தார்கள்.

2002-ம் ஆண்டு மே திங்கள் 29 ஆம் நாள் அருட்தந்தை ஆபிரகாம் அடிகளார் நமது பங்கிற்கு இரண்டாவது பங்குத்தந்தையாக இறைப்பணியை தொடர்ந்தார்கள். பங்கின் வளர்ச்சிக்காக ஆலயம் கட்டப்பட்டது. தந்தையின் பணியில் முக்கியமான பணி மறைக்கல்வி நமது பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர் இளைஞர் இளம் பெண்கள் இறைபக்தியில் வளர அடிப்படை தேவை மறைக்கல்வி என்பதை உணர்ந்து அதிகமான பிள்ளைகள் வந்து படிக்க பிள்ளைகளின் வசதிக்காக மறைக்கல்வி நடக்கும் நேரத்தை மாற்றியதினால் 300 மாணவர்கள் மறைக்கல்வி பயின்றார்கள்.

24 ஆசிரியர்கள் நற்செய்தி பணி செய்தார்கள். ஞாயிறு காலை 8:30 மணி திருப்பலியை அன்பியங்கள் சிறப்பிக்கத் தொடங்கியன. நமது பங்கு ஏழை குடும்பங்கள் இருப்பதை உணர்ந்த தந்தை அவர்கள் ஜாதி மத பேதமின்றி அனைத்து ஏழை மக்களும் பயன்பெற புனித வின்சென்ட் தே பவுல் சபையை ஏற்படுத்தி ஏழை மக்களுக்கு உதவி செய்தார்கள். அன்று முதல் புனித வின்சென்ட் தே பவுல் சபை நமது ஆலயத்தில் சிறப்பாக செயல்படுகிறது.

மகளிர் குழுவினர் 30 குழுக்களாக செயல்பட்டது. நற்கருணை பக்தியை வளர்க்க மாதம் தோறும் முதல் வெள்ளி கிழமை மாலை 6.30 மணிக்கு திருப்பலி அதைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடந்து வருகிறது. தந்தை அவர்களின் குருத்துவ வெள்ளி விழாவை முன்னிட்டு மாத பக்தியை வளர்க்க மாதா கெபி ஒன்று தேவை என்பதை உணர்ந்து ஆலயத்தின் முன்பகுதியில் இடப்புறமாக 2006 ஆம் ஆண்டு அமைத்தார்கள். தொடர்ந்து மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் மாலை ஆறு முப்பது மணிக்கு சிறப்பு திருப்பலி அன்னையின் கெபியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அருட்தந்தை சின்னப்பா காரசாலா அவர்கள் மூன்றாவது பங்கு தந்தையாக பொறுப்பேற்று பணி செய்தார்கள். ஞாயிறு மறைக்கல்வி மாணவர்களுக்காக வகுப்பு முடிந்ததும் அவர்களுக்கென்று .தனியாக திருப்பலி புனித செபஸ்தியார் சமூக கூடத்தில் நிறைவேற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. திருப்பலிக்கு வெவ்வேறு குருக்களை அழைத்து மறையுரை ஆற்றி மக்களை ஆன்மீகத்தில் வளர்தெடுத்தார். 2014ஆம் ஆண்டு மே திங்கள் இறுதிவரை சிறப்பாக இறை பணி செய்தார்கள்.

4 வது பங்கு தந்தையாக அருட்தந்தை வின்சென்ட் சின்னத்துரை அவர்கள் 2014 ஜூன் முதல் பங்கின் அருள் பணியாளராக பொறுப்பேற்றார்கள். திருவருகைக் கால தியானம் தவக்காலங்களில் இரு முறை தியானம், புனித வெள்ளி அன்று எருசலேம் கல்லறை அமைத்து இறந்த இயேசுவின் உடலை பவணியாக எடுத்துச்சென்று இறுதியாக கல்லறையில் வைத்து பங்கு மக்கள் அனைவரும் வரிசையாக வந்து தியானித்தது குறிப்பிடத்தக்கது..

மறுநாள் காலையில் ஒரு மணி நேரம் கல்லறை தியானம் நடத்தி மக்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்தியது சாலச் சிறந்தது. பங்கு மக்கள் அனைவரும் ஞாயிறு திருப்பலிக்கு நேரத்தோடு வந்து முழு திருப்பலியிலும் கலந்து கொள்ள வேண்டும் என்பது தந்தையின் கண்டிப்பான வேண்டுகோள். மறைக்கல்வி பிள்ளைகளுக்கு முடிந்த உடன் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்தது வரவேற்கத்தக்கது. அது இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

வயது முதிர்ந்தவர்கள் மேல் மாடியில் திருப்பலிக்கு வருவது கடினம் என உணர்ந்த தந்தை அவர்கள் மின் தூக்கி அமைத்து ஆலயத்திற்கு வர முடியாதவர்கள் அனைவரும் வந்து திருப்பலியில் கலந்து கொள்வது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த ஆண்டில் நமது தூய திரித்துவ ஆலயம் தனி பங்காக செயல்பட்டு 25வது ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடினார்கள். அத்தருணத்தில் தொடர் சிலுவை பாதை, பீடம் மற்றும் நற்கருணை பேழை, ஒலி, ஒளி, மின்விசிறி போன்ற பல வேலைகள் புதிதாக அமைத்து ஆலயத்தை அழகுபடுத்தி 2019 ஆம் ஆண்டு மே திங்கள் மூன்றாம் நாள் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிச்சாமி அவர்களை அழைத்து புனிதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மாதா கெபியை அழகுற அமைத்து ஆலய வளாகத்தை சிமெண்ட் கற்களால் அழகுப்படுத்தினார். இவ்வாறு அருட்தந்தை வின்சென்ட் சின்னத்துரை அவர்கள் மே 2014 முதல் ஜூன் 2019 வரை மிகச் சிறப்பாக பணி செய்தார்கள்.

தற்போது நமது பங்கில் பீடச் சிறுவர் குழு, மூன்று பாடல் குழுக்கள், இளைஞர் குழுவினர், மகிமை அன்னை க்யூரியாவின் கீழ் மகிமை மாதா பிரசீடியம், மாதரசி மாதா பிரசீடியம், விசுவாசிகளின் ராக்கினி பிரசீடியம், இரக்கத்தின் மாதா பிரசீடியம், அற்புதமாதா சிறுவர் பிரசீடியம், சகாய மாதா இளையோர் பிரசீடியம், சமாதானத்தின் அரசி பிரசீடியம், மழை மலை மாதா பிரசீடியம் ஆகிய எட்டு பிரசீடீயங்கள் செயல்பட்டு வருகின்றன

Go To Top